வில்லியம் பிளேக் கவிதை
விஷ விருட்சம் - வில்லியம் பிளேக் நான் என் நண்பனிடம் கோபம் கொண்டேன் : அதன் கடுமையை அவனிடம் சொன்னேன், ஆவேசம் முடிந்துபோனது . நான் என் எதிரி மீது கோபம் கொண்டேன் : அதை சொல்லவில்லை அவனிடம், ஆவேசம் பல்கிப் பெருகியது. நான் அதை அச்சம் கொண்டு நீர் பாய்ச்சினேன், இரவும் காலையும் என் கண்ணீருடன்; மேலும், சூரிய வெப்பத்தின் புன்னகையுடனும், மற்றும் மென்மையான வஞ்சக தந்திரங்களுடனும். அது இரவும் பகலும் வளர்ந்தோங்கியது, பிரகாசமான ஆப்பிள் ஒன்றைத் தாங்கி செழித்தது என் எதிரி கண்ணுற்றான் அதன் ஜொலிஜொலிப்பை மேலும், அது என்னுடையது என்றும் அறிந்தான், முகத்தை மூடி மறைத்த இரவில் என் தோட்டத்தில் நுழைந்து களவெடுத்தான். காலையில் நான் அதைப் பார்த்த போது பீறிட்டது மகிழ்ச்சி மரத்தின் அடியில் சுருண்டு கிடந்தான் அவன். தமிழில் : கௌதம சித்தார்த்தன் வஞ்சம் மற்றும் அச்சுறுத்தல் என்னும் படிமத்தில் இந்தக் கவிதை தலைசிறந்த படைப்பாகப் போற்றப்படுகிறது. இதில் வரும் 'கோபம்' என்னும் சொல்லை...